Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆரம்பித்தது பிரபுதேவா-லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படம்....

On February 9, 2017
P_20170209_110532_1
Share
P_20170209_110532_1 வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் சார்பாக கே.எஸ்.ஸ்ரீநிவாசன் மற்றும் கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'எங் மங் சங்'. இப்படத்தினை எம்.எஸ்.அர்ஜுன் இயக்க நடிகர்கள் பிரபுதேவா கதாநாயகனாகவும், லட்சுமி மேனன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்பட பூஜையில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ஏ.எல்.அழகப்பன், எம்.சுவாமிநாதன், கே.ராஜன், பிரமிட் நடராஜன், டி.டி.ஜி.தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, ராதாகிருஷ்ணன், கதிரேசன், கே.முரளிதரன், எச்.முரளி, எ.எம்.ரத்னம், பெப்சி சிவா, நடிகர்கள் பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின் சுவாமிநாதன், ரோபோ சங்கர், இசையமைப்பாளர் அம்ரிஷ், இயக்குனர்கள் சித்ரா லக்ஷ்மணன், சி.சுந்தர், எம்.எஸ்.அர்ஜுன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கதாநாயகன் பிரபுதேவா மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெருமையை பற்றி பேசினார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிற்கிறது என அப்படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான கே.எஸ்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.