மூன்று மொழிகளில் வெளியாகும் "காஸி":

இந்திய திரைப்பட ரசிகர்கள் என்றாலே, தேசப்பற்று படங்களுக்கு எப்போதும் ஆதரவை தருவது இயல்பு. அந்த வகையில் வரும் பிப்ரவரி 17’ம் தேதி அன்று “காஸி” என்னும் திரைப்படம் வெளியாகிறது.
எதிரி நாடு நீர்முழுகி கப்பல் நம் நாட்டின் மீது போர் தொடுக்க, அந்த போரை நம் நாடு வீரர்கள் எவ்வாறு எதிர்த்து போரிட்டு நம்முடைய நாட்டை எதிரிகளிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பது தான் படத்தின் சாரம்சம். ராணா கதாநாயகனாக நடிக்க, டாப்சி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
நீர்மூழ்கி கப்பல் என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்க, பி.வி.பி. சினிமாஸ் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் “காஸி” திரைப்படம் வரும் பிப்ரவரி 17’ம் தேதி அன்று வெளியாகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
