தமிழில் வருகிறது ஒரு சூப்பர் ஹீரோ ரஷிய திரைப்படம்....

ரஷியாவில் புகழ் பெற்ற பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ திரைப்படமான “கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ்” வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவில் வெளிவரவுள்ளது. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தை “மாபியா, அமெரிக்கன் ஹெஇஸ்ட்” போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய அர்மேனிய இயக்குநர் சரிக் அண்ட்ரியாசியான் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சூப்பர் ஹீரோ நட்சத்திரங்களாக ரஷ்ய நடிகர்கள் அலினா லணினா, செபஸ்டின் சிசக், சன்சார் மதியேவ் மற்றும் ஆண்டன் பம்புஷ்னி ஆகியோர் நடித்துள்ளனர். இது உலக அளவில் வெளிவந்த மிக சிறந்த சூப்பர் ஹரோ படங்களுள் ஒன்றாகும். ஹாலிவுட்டில் வெளிவரும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு இணையாக அதே போல் மிக சிறந்த தரத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப்ரவரி 3’ம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகள் இந்திய சூப்பர் ஹீரோ சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். “கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ்” திரைப்படத்தின் இந்திய உரிமையை மூவிவேல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 24’ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
