Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முன்னணி நடிகைகளுடன் நடிக்கும் நடிகர் கொட்டாச்சியின் மகள்...

On June 5, 2017
கொட்டாச்சி
Share
கொட்டாச்சி தமிழ் சினிமாவில் த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி நடிகைகளாக இருக்கின்றனர். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருவருக்குமே போர் அடித்துவிட்டது. இதன் காரணமாக பேய் மற்றும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்களில் நடித்து வருகின்றனர். இதில் நயன்தாரா தற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்விக்கு அம்மாவாக நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் த்ரிஷாவுக்கு மானஸ்வி மகளாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. kottachi தமிழ் சினிமாவில் தன்னை காமெடியனாக நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வந்த கொட்டாச்சியின் மகள் மானஸ்வி முன்னணி நடிகைகளுடன் நடிப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.