இன்று மாலை வெளியாகவுள்ளது வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கும் இப்படத்தை ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு சிவகார்த்திகேயனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 29ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகயிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ஆடியோ போன்றவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
