Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தங்கமகன் மாரியப்பன் மீது போலீஸில் புகார்...

On June 5, 2017
maari
Share
maari தங்கமகன் மாரியப்பன் யாரு பாக்குறிங்களா வேற யாரும் இல்ல ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன். இவர் மேலதான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது என்ன புகார் வாங்க தெரிஞ்சிப்போம். சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் தன்னுடைய பைக்கில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சதீஷ்குமாரின் பைக் மண் சறுக்கி தடம் புரண்டு கீழே விழுந்துள்ளது. இதில், எதிர்பாராத விதமாக எதிரே காரில் வந்து கொண்டிருந்த மாரியப்பனின் கார் மீது பைக் மோதியுள்ளது. கார் சேதமடைந்த அந்த நேரத்தில், பைக்கில் வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கார் சேதமடைந்ததால் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் யுவராஜ் மற்றும் சிலர் சதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்று காரை சேதப்படுத்திவிட்டாய் என்று மிரட்டியுள்ளனர். அதோடு, அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று சதீஷ்குமார் காணாமல் போய்விட்டார். இதில் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே சடலம் ஒன்று இருந்ததாகவும், அது சதீஷ்குமாரின் சடலம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சதீஷ்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தங்கமகன் மாரியப்பன் மறுத்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.