முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எங்களால் பாதிப்பு வராது என்று கூறும் பன்னீர்செல்வம்...

தமிகழத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் அணியால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பன்னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகிறது, நீங்கள் தனி அணியாக இருக்கிறீர்கள், இதனால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் “ தற்போது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு எங்களால் எந்த ஒரு இடியுருகளோ அல்லது பாதிப்போ வராது” என்று தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
