Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஏழை முஸ்லீம்கள், இலவச சஹர் உணவு: ஐ.டி இளைஞர்கள்...

On June 7, 2017
sahar
Share
sahar காலையில் சூரியன் உதிக்கும் முன்னரே நள்ளிரவு 1.30 மணியளவில் தங்கள் வீட்டிலிருந்து கிளம்பும் இந்த இளைஞர்கள், இரண்டு சப்பாத்தி, பருப்பு மற்றும் சாதம் ஆகியவை கொண்ட உணவுப் பொட்டலங்களை தயாரித்து எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் அதிகாலை 3.30 மணிக்குள் சஹர் உணவு வாங்க முடியாத ஏழை முஸ்லீம்களை கண்டறிந்து, அவர்களின் வீட்டிற்கே சென்று தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களை அளித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத் அருகிலுள்ள மெஹ்திபட்டினம்,முராட் நகர்,மலக்பேட்,மியாபூர் போன்ற பகுதிகளில் இலவச சஹர் உணவை இந்த இளைஞர்கள் விநியோகித்து வருகின்றனர். இந்த உணவுக்கான மொத்த செலவையும், இந்த நான்கு இளைஞர்களும் தங்கள் சொந்தப் பணத்தில் செய்து வருகின்றனர். ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு உணவளித்தால், கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதே இந்த நான்கு இளைஞர்களின் எண்ணமாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.