Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் திரையில் வரும் ரஜினி, கமல் பட காமெடி நடிகர் !

On August 3, 2017
1501722441-2817
Share
1501722441-2817 10 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் காமெடி நடிகர் ஜனகராஜ். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர். இவருடைய பாடி லாங்க்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரிதான் இவருடைய சிறப்பு. 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை பிசியாக நடித்து கொண்டிருந்த நடிகரும் ஆவார், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2007ஆம் ஆண்டு முதல் 2016 வரை அவர் படங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி - த்ரிஷா நடிக்கும் '96' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 10 வருடங்கள் இடைவெளி விட்டாலும் இயக்குனர் சொன்னதை கேட்டு ஒரே டேக்கில் ஒகே செய்து விட்டாராம். இதற்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். இந்த படத்தின் மூலம் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைத்து அவர் திரையில் வளம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.