தல அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அஜித் திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு 25 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு ரசிகர்கள் சிலை நிறுவுதல் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
25 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு, ட்விட்டர் பக்கத்தில் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
அவற்றில் சில
தனுஷ்: ஒரு நடிகராக, ஒரு மனிதராக எனக்கு ஒரு உந்துதலாக இருந்ததற்கு நன்றி அஜித் சார். மன அமைதியும், வெற்றியும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
விக்னேஷ் சிவன்: ஒருபோதும் முயற்சியை விடாதே, வாழு வாழ விடு என்பதையே அவர் எப்போதும் சொல்வார். 25 வருடங்களாக அவரை பிரமிப்புடன் பார்த்துவிட்டு இப்போது நான் சொல்ல விரும்புவது இதுதான். இது வெறும் ஆரம்பம் தான்.
அருண் விஜய்: 20 வருடங்களுக்கு மேலாக எங்களுக்கு உத்வேகம் அளித்துக்கொண்டிருப்பதற்கு நன்றி. உங்களை அறிந்ததற்கும், உங்களுடன் இணைந்து பணியாற்றியதற்கும் பெருமை கொள்கிறேன். உங்கள் அர்ப்பணிப்புக்கு வணக்கங்கள்.
பிரசன்னா: சினிமா பின்னணி இல்லாமல், அல்டிமேட் ஸ்டாராக உயர்ந்து, லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற அன்பான தல, ஒரு உந்துதல்.
எடிட்டர் ரூபன்: நீண்ட வெற்றிகரமான பயணமாக இருக்க வேண்டும் என அஜித் சாரை வாழ்த்துகிறேன். அவரது அன்புக்கும், அவர் ரசிகர்களது அன்புக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி
அர்ச்சனா கல்பாத்தி: பல ப்ளாக்பஸ்டர்கள் தந்து எங்கள் தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருந்ததற்கு நன்றி அஜித் சார். இன்னும் பல ப்ளாக்பஸ்டர்களை எதிர்நோக்குகிறேன்.
எழுத்தாளர் சுபா: பொன்னான இதயமும், வைரம் போன்ற உறுதியும் கொண்ட ஒளிரும் நட்சத்திரத்தின் வெள்ளிவிழா. உங்கள் புகழ் மேன்மேலும் உயரட்டும் அஜித் சார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
