கே எல் ராகுல் சாதனை!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது.
இத்தொடரின் 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
கே எல் ராகுல் சாதனை:
முதல் டெஸ்ட் போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடாமல் இருந்த ராகுல், 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
தொடக்க வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கிய ராகுல், 7 பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டினார். 82 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இன்று இவர் அடித்த அரைசதம் இந்திய கிரிக்கெட்டில் சாதனையாக அமைந்துள்ளது!
இது இவர் அடித்த தொடர்ச்சியான 6வது அரை சதமாகும்.
இதற்கு முன் இந்த சாதனை இந்தியாவின் குண்டப்பா விஸ்வநாதன் மற்றும் ராகுல் டிராவிட் படைத்திருந்தனர்.
மேலும் ஒரு அரை சதம் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச அளவில் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டியில் 7 அரைசதம் அடித்த 5 வீரர்களுடன் தன் சாதனையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கே எல் ராகுலுக்கு கிடைக்கும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
