Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மலேசியாவில் பரவசமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.

On January 23, 2018
fffffffffffffff
Share
fffffffffffffff தேவி ஸ்ரீபிரசாத் கூறியதாவது, தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமரவைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன். இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே நேரத்தில் கிடைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயமாகிவிட்டது’ என்றார். அதே போல் ஒரு திரைபடத்தில் இடம்பெற்ற பாடல்களை, பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியை தெலுங்கில் ‘கைதி நம்பர் 150 ’ மூலம் தொடங்கிவைத்ததும் இவர் தான். இன்று அது அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. அதே போல் ஒரு திரைபடத்தில் இடம்பெற்ற பாடல்களை, பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியை தெலுங்கில் ‘கைதி நம்பர் 150 ’ மூலம் தொடங்கிவைத்ததும் இவர் தான். இன்று அது அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் *தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.