Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 62-வது இடம்.

On January 23, 2018
gggg
Share
gggg உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்ட பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது. உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன. இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 60-வது இடத்தில் இருந்தது. வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் லித்துவேனியாவை தொடர்ந்து ஹங்கேரி, அசெர்பைஜான், லடிவியா, போலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.