Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மதிப்பெண் குறைவாக எடுத்தால் இந்த தண்டனையா !

On August 4, 2017
nirvaanam
Share
nirvaanam உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் அவர்களை ஆசிரியை ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக தண்டித்துள்ளார். மதிப்பெண் குறைவாக எடுத்த அந்த குறிப்பிட்ட மாணவிகள் இருவரையும் ஆடைகளை கழற்றி விட்டு வகுப்பறையில் நிற்க வைக்கத்துள்ளார். ஆசிரியையின் இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இரு மாணவிகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த பள்ளிக்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியையை பெண்களை பொது இடத்தில் அவமானப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.