சோனியா அகர்வாலுடன் நடிக்கும் மூன்று நாயகிகள் !

சாயா, எவனவன், வின்னர் ஆகிய படங்களை தொடர்ந்து சோனியா அகர்வால் நடிக்கும் படம் 'உன்னால் என்னால்'. இப்படத்தில் அவருடன் 3 இளம் ஹீரோயின்களும் அறிமுகமாகின்றனர். இப்படத்தை எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கும் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இதைப்பற்றி கூறும்போது, 'கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அப்படிவரும் 3 இளைஞர்கள் சந்தர்ப்பவாத கும்பலில் சிக்குகின்றனர். அவர்களின் சுயரூபம் தெரிந்து விலக முயன்றபோது எதிர்பாராத நிகழ்வில் மாட்டிக் கொள்கின்றனர். அதிலிருந்து மீள்கிறார்களா இல்லையா என்பதே கதை. நாயகர்களாக என்னுடன் ஜெகா, உமேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். லுப்னா, நிகாரிகா, சஹானா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சுப்பையா தயாரிப்பு. கிச்சாஸ் ஒளிப்பதிவு. முகமது ரிஸ்வான் இசை. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கிறது' என்றார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
