Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மணக்கால் அய்யம்பேட்டை திருத்தலத்தின் தனிச்சிறப்புகள்!

On August 2, 2017
parkadal
Share
parkadal # கோச்செங்கட் சோழ மன்னனால் சோழ வள நாட்டில் அமைக்கப்பட்ட மாடக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும். # ஞான சமபந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. # அகத்தியர் மற்றும் பல சித்தர்கள் வழிபட்ட திருத்தலமாகும். # உலக நாயகனும் உலகளந்த பெருமானும் உடனுறையும் மாடக்கோவில். # சிவனின் திருமேனி கைலாய மலைக்கல்லால் சுயம்புவாக உருவானது. # அம்பாள் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் தமிழ் நாட்டின் மூன்று தலங்களில் திருவாரூர், திருமெய்ச்சூர், தவிர இத்தலமான திருப்பெருவேளூரும் ஆகும். # ஶ்ரீ கால பைரவர், ஶ்ரீ பைரவர், ஶ்ரீ வடுக பைரவர் என்ற பெயர்களுடன் மூன்று பைரவர்கள் அருளாட்சி புரிகின்றனர். # இவ்வூரில் முற்காலத்தில் 18 சிவாலயங்கள், 18 தீர்த்தங்கள், 18 திருவீதிகள் இருந்தன. # இந்த மாடக்கோயிலின் படிகளும் 18 ஆக அமைந்துள்ளது. # வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்குமிடையே நடந்த போட்டியின் காரணமாக வந்து விழுந்த கயிலை மலை சிகரங்களுள் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. # ராமலிங்கேஸ்வரர், சரஸ்வதீஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர், ஐராவதீஸ்வரர், தாரகேஸ்வரர், தர்மபுரீஸ்வரர் என்ற ஆறு சிவலிங்கங்களை தன்னகத்தே இத்தலம் கொண்டுள்ளது. # ஶ்ரீ வைகுண்ட நாராயணப் பெருமாளுக்கு தனி சன்னதி இவ்வாலயத்தில் உள்ளது. # இந்த ஆலயத்தில் ஶ்ரீ கணபதி தனது வாகனமின்றி தனிமையில் அருள்புரிகிறார். # நான்கு முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி அனுகூல மூர்த்தியாக விளங்குகிறார். # சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் அருள்புரிகிறார். # அம்பிகை தனது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் வீராசனம் அமைத்து அமர்ந்து இருக்கிறார். # லலிதா திரிசடை தோன்றிய இடம் இதுவாகும். # சுக்கிர நீச பரிகார திருத்தலமாகவும் விளங்குகிறது. # இங்குள்ள வனதுர்க்கை அருள் புரிவதில் வல்லவர். # ஆலயத்தின் பின்புறம் தீராத நோய்களை தீர்த்து வைக்க முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இது தற்போது தாமரைக்குளம் என்றழைக்கப்படுகிறது. # சனீஸ்வரரும், சூரியனும் மேற்கு நோக்கி அமர்ந்து அனைத்து நவக்கிரக தோஷங்களையும் போக்கி விடுகின்றனர். # யோக சண்டிகேசர் உட்பட இரண்டு சண்டிகேசர்கள் உள்ளனர். # இவ்வூரின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமான நான்கு அய்யனார் ஆலயங்கள் அமைந்துள்ளன. # திருமணத்தடைகள் நீங்கவும், மக்கட்பேறு கிட்டவும் வணங்க வேண்டிய ஆலயம். manakkal # இவ்வூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த மேலத்தெரு ஶ்ரீ முத்துமகா காளியம்மன் ஆலயமும், கீழத்தெரு ஶ்ரீ வாலை முக்கண்ணியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. # ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயமும் இவ்வூரில் அமைந்துள்ளது. # இவ்வூரில் எட்டு வினாயகர் ஆலயங்கள் தனித்தனியாக அமைந்துள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.