Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மாரடைப்பின் போது உடம்பில் ஏற்படும் அறிகுறிகள்!!

On August 2, 2017
cardiac
Share
cardiac • நடு நெஞ்சில் திடீரென வலி ஏற்படும் நெஞ்சை இறுக்குவதுபோல, அமுக்குவது போல, பிழிவதுபோல, அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம். வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும். • இவ்வலி சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். • இவ்வலியானது நடுமார்பின் உள்புறத்தில் ஏற்பட்டு இடது தோழ்மூட்டு, இடது கை, தொண்டை, நாடி, கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கும் பரவலாம் • இவ்வலியுடன் கடுமையான வியர்வை, களைப்பு, இளைப்பு, அதனைத் தொடர்ந்து மயக்கம் தோன்றலாம் • இறந்து விடுவோம் என்ற பயத்தில் மனம் பதற்றமாக இருக்கும். • நெஞ்சு வலி இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம் - Silent Attack) இவ்வாறான அறிகுறிகள் யாவும் ஒருவருக்கு ஏற்படும் என்றில்லை சிலருக்கு இவற்றுள் சில அறிகுறிகளே தோன்றலாம். பெண்களில் ஏற்படும் மாரடைப்பின்போது • மூச்சு எடுப்பதில் சிரமம் (சுமார் 58 விகிதம்) • உடல் பலவீனமாக காணப்பெறும் (சுமார் 55 விகிதம்) • வழமைக்கு மாறாக களைப்பாக இருக்கும் (சுமார் 43 விகிதம்) • உடல் வியர்வையுடனும் குளிந்தும் காணப்படும் (சுமார் 39 விகிதம்) • தலைப் பாரம், கிறுகிறுப்பு இருக்கும் ( சுமார் 39 விகிதம்) சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.