துவக்க வீரரை தேர்வு செய்வதில் கேப்டன் கோலிக்கு குழப்பம்!

இந்தியா- இலங்கை இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் துவங்குகிறது. இதில் இந்திய அணியின் துவக்க வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் கோலிக்கு பெரும் குழப்பத்தை இந்திய வீரர்களான தவான், முகுந்த், ராகுல் அளித்துள்ளனர்.
முதல் டெஸ்டின் இன்னிங்சில், தவான் 190 ரன்கள் விளாசினார். அதேபோல இரண்டாவது இன்னிங்சில் அபினவ் முகுந்த அரைசதம் அடித்து கைகொடுத்தார். இந்நிலையில் வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடைந்த ராகுல், மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இரண்டாவது டெஸ்டில் துவக்க வீரர்களாக யாரை தேர்வு செய்வது என பெரும் குழப்பத்தில் உள்ளார் கோலி. ஆனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதனால், தவான், ராகுல் ஆகியோர் இரண்டாவது டெஸ்டுக்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
