Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பழம்பெரும் இந்தி நடிகர் 'ஓம் புரி' மரணம்

On January 6, 2017
ompuri759
Share
ompuri759பிரபல இந்தி நடிகர் ஓம் புரி மாரடைப்பால் மும்பையில் உள்ள அவரது வீட்டில்  இன்று காலை காலமானார். அவருக்கு 66 வயது. ஓம் புரி திரைப்பட தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். இவர் 'காசிராம் கொட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தியில் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் மட்டுமல்லாது டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஓம் புரிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.