Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்

On January 6, 2017
fotorcreated
Share
fotorcreatedநயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கி இருக்கும்  படம் 'அறம்'. இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில்  கோட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்திருக்கிறார். இப்படம் வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை  பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து இயக்குனர் கோபி நயினார் கூறுகையில், "உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாக விளங்கி கொண்டிருப்பது, தண்ணீர் பஞ்சம் தான். அத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும் போது, நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின்  பங்கும் பெரியளவில் இருக்கும். எங்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய கூடிய அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நாங்கள் யோசிக்கும் பொழுது, எங்கள் அனைவரின் எண்ணத்திலும் உதயமானது ஜிப்ரான் தான். நிச்சயமாக  இசை துறையில் அவர் பெற்று இருக்கும் அங்கீகாரம், எங்களின் 'அறம்' திரைப்படம் மூலம் மேலும் வலு பெறும்." என கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.