Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித்துடன் மீண்டும் இணையும் கவுதம் மேனன்

On January 6, 2017
ajithgautham
Share
ajithgauthamஅஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வெளிவந்த படம் 'என்னை அறிந்தால்'. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக கவுதம் மேனன் கூறியுள்ளார். சென்னையில் கல்லூரி ஒன்றில், மாணவர்களுடன் கலந்துரையாடிய கவுதம் மேனன் 'என்னை அறிந்தால்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்த போவதாக தெரிவித்துள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கிவருகிறார். அதையடுத்து விக்ரம் நடிக்கவிருக்கும் படமொன்றை இயக்கவுள்ளார். இப்படங்களை முடித்துவிட்டு 'என்னை அறிந்தால்' படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளைத் தொடங்குவார் என தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.