Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படமாகிறது பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட சம்பவம்....!

On July 26, 2014
pulipparvai
Share

தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் உலகையே உலுக்கிய ஒன்று. அந்த கொடிய சம்பவத்தை மையக்கருவாகவும் பாலச்சந்திரனை மையமாகவும் வைத்து ‘புலிப்பார்வை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி..

இவர் வேறு யாருமல்ல.. ரட்சகன், ஸ்டார், ஜோடி ஆகிய படங்களை இயக்கிய அதே பிரவீன் காந்தி தான்... இந்தப்படத்திற்காக பாலச்சந்திரன் போல உருவ அமைப்பு கொண்ட நூறு பையன்களை வரவழைத்து அதில் இருந்து சத்தியதேவ் என்கிற பையனை பால்ச்சந்திரனாக நடிக்கவைத்துள்ளார் பிரவீன் காந்தி.

இதுவரை பல படங்கள் விடுதலைப்புலிகள் பற்றி வந்தாலும் இது இன்னும் கொஞ்சம் அழுத்தமாக ஈழத்தமிழர்களின் உணர்வுகளையும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களையும் சொல்லும் விதமாக படமாக்கப்பட்டிருக்கிறதாம். வேந்தர் மூவிஸ் சார்பாக மதன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.