அஞ்சானை பார்த்து அஞ்சும் 13 ஹீரோக்கள்..!

ஹாலிவுட்டின் மெகா மெகா படம் என்று 2010ல் வெளியான ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தை குறிப்பிடலாம். காரணம் சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு ஸ்வாஸ்நேகர், புரூஸ் வில்லிஸ், ஜேசன் ஸ்டேதம், ஜெட் லீ உட்பட 13 ஆக்சன் ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து கலக்கியிருந்தார்கள். சில்வஸ்டர் ஸ்டாலோனே இந்தப் படத்தை இயக்கியிருந்தது இன்னொரு சிறப்பு.
அதை தொடர்ந்து 2012ல் ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்-2’ வெளியாகி அதுவும் சக்கைப்போடு போட்டது. இந்தப்படத்தில் ஸ்டாலோன் நடிப்பு, திரைக்கதையுடன் நின்றுகொள்ள சைமன் வெஸ்ட் என்பவர் படத்தை இயக்கினார். இப்போது அதன் தொடர்ச்சியாக ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்-3’ உருவாகியுள்ளது. இந்தப்படத்தை இயக்கியுள்ள்ளார் பாட்ரிக்ஸ் ஹக்.
பொதுவாக ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தின் முந்தைய பாகங்கள் இரண்டுமே ஆகஸ்ட்(13, 17) மாதத்தில் தான் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த சென்டிமெண்ட்டின்படி, வரும் ஆகஸ்ட் 15ல் அதாவது நம் இந்திய சுதந்திர தினத்தன்று ஹாலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்-3’ படம் உலகெங்கும் வெளியாகும் என கிட்டத்தட்ட ஏப்ரல் மாதமே தீர்மானிக்கப்பட்டது.
இப்போதும் அதில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை தான். ஆனால் இத்தனை ஹாலிவுட் சிங்கங்களும் தமிழ்நாட்டு சிங்கத்தை பார்த்து பயப்படுவதால், அதுதாங்க சூர்யா நடித்துள்ள அஞ்சான் படம் ரிலீசாவதால், அந்த சூறாவளியில் சிக்கிவிடக்கூடாது என இந்தியாவில் மட்டும் ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட்-22ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
