‘பெங்களூரு டேய்ஸ் ரீமேக்கில்’ ஆர்யா–சமந்தா–சித்தார்த் காம்பினேஷன்...!

மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படத்தை கேரள இளைஞர் கூட்டமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது..
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நஸ்ரியா.. இவர் தவிர ‘மரியான்’ பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் என இன்னும் மூன்று ஹீரோயின்களும் உண்டு. இப்போது இந்தப்படத்தின் வெற்றிதான் பிவிபி நிறுவனத்தை இந்தப்படத்தின் ‘அனைத்திந்திய ரீமேக் உரிமை’யை வாங்க வைத்திருக்கிறது.
தற்போது பஹத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா ஆகியோரின் கூட்டணி கதாபாத்திரங்களில் தமிழில் ஆர்யா, சித்தார்த், நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் பாப்புலரான நடிகர்கள் கிடைத்ததால் தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக ரீமேக் செய்ய இருக்கிறார்களாம். அந்தவகையில் நாகசைதன்யா அறிமுகமாகும் முதல் தமிழ்ப்படமாக இது இருக்கும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
