Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நாடு முழுவதும் அக்.13-இல் பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தம்!

On October 7, 2017
retail_slide
Share

petrol bank_0

பெட்ரோலிய பொருள்களுக்கு தினமும் விலை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்துக் கொண்டு வந்தன. இந்நிலையில் புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் மே 1 முதல் தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலிண்டர் எரிவாயு போல் பெட்ரோலிய பொருள்களுக்கு ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் திட்டத்தை விரைவில் தொடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

retail_slide

இந்நிலையில் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெட்ரோலிய பொருள்களை வீடு தேடி கொண்டு வரும் திட்டத்தை கைவிடக் கோரியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.