நயன்தாராவுக்கும் எழுதியாச்சு, ஜோதிகாவுக்கும் எழுதியாச்சு! பெருமிதத்தில் உமாதேவி

தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையை கொண்டு தனித்திறமையுடன் தனக்கென ஒரு பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ என்ற பாடல் அவருகென்று ஒரு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன.
தற்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார், உமாதேவி.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் 'மகளிர் மட்டும்' படத்தில் உமாதேவி எழுதியுள்ள, ‘அடி வாடி திமிரா…’ பாடல் லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ரசிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல் ஜிப்ரான் இசையில் 'அறம்' மற்றும் கோவிந்த் மேனன் இசையில் '96' படப்பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிறார் உமாதேவி.
“புது வரலாறே புற நானூறே” மற்றும் “தோரணம் ஆயிரம்” இந்தப்பாடல்கள் இடம்பெற்றுள்ள படம் 'அறம்'. இந்த பாடல் வரிகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிக்கிறார், உமாதேவி.
த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா இந்த மூவரின் படங்களிலும் ஒரே சமயத்தில் பாடல்கள் எழுதியதில் மகிழ்ச்சி என்கிற உமாதேவி, வழக்கமான பாடல் வரிகளில் இருந்து என் வரிகள் மாறுபட்டிருப்பதை கவனித்து பலரும் பாராட்டும்போது உண்மையாகவே மகிழ்கிறேன் என்கிறார்.
பரபரப்பாக பல படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் உமாதேவி, மெட்ராஸ், கபாலி, படங்களைத் தொடர்ந்து மீண்டும் தன் ஆஸ்தான இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியுடன் உருவாகும் ‘காலா படத்திற்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் உமாதேவி.
Magalir Mattum | Adi Vaadi Thimiraa Lyric Video:
https://www.youtube.com/watch?v=GM2oOZRvhig
Aramm | Pudhu Varalaare Song Making Video:
https://www.youtube.com/watch?v=DehjuJ3MzNs
Aramm | Thoranam Aayiram Song Making Video
https://www.youtube.com/watch?v=uX6WNxcQTWkComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
