Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சகாயத்துக்கு கொலை மிரட்டல்! பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு

On August 8, 2017
sagayam-ias-060
Share
sagayam-ias-060 சென்னை ஐகோர்ட்டில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் புகார் கூறியுள்ளார். கிரானைட் முறைகேடு குறித்து ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடந்தது. இக்குழு தனது விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் சகாயம் தாக்கல் செய்த மனு: கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததால், தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. தனக்கும், விசாரணைக்கு உதவிய சேவற்கொடியானுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். தனக்கு உதவிய பார்த்தசாரதி விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். விசாரணை குழுவின் ஆவணங்களை ஒப்படைக்க அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து, விசாரணை அறிக்கையை ஒப்படைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.