‘‘ஊர்ல இருக்கவா? வேணாமா?’’ _ரசிகர்களிடம் அமிதாப்பச்சன் கேள்வி

இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு வரும் அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. அன்று 75 வயதை தொடும் அவரது பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஆனால் தனக்கு இந்த மாதிரியான ஆடம்பர விழாக்களில் நம்பிக்கை இல்லை எனவே எந்த கொண்டாட்டங்களும் ரசிகர்கள் செய்ய வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கட்டளை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ''எனது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் . எனக்கு தெரியாமல் கொண்டாட்டங்களை நடத்த நீங்கள் முயற்சித்தால் நான் இங்கே இருக்க மாட்டேன் . அன்று எங்காவது சென்று விடுவேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
