நடிகர் ராதாரவி மற்றும் காளைக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்:

தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் கூட்டத்தில் நடிகர் ராதாரவி நாசரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். அதுமட்டுமின்றி நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் பல நடிகர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். அவருடன் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் சங்கத்தின் துணை தலைவர் காளை சக நடிகர்களை நாய்கள் என மிக கேவலமாக திட்டியுள்ளார். இதை பற்றிய செய்தியை காணொளி ஆதாரத்துடன் நவம்பர் 03, 2014 அன்று நமது "ஒற்றன் செய்தி" இணையதள ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த காணொளியையும், செய்தியையும் கண்ட நடிகர்கள் நாசர், விஷால் மற்றும் பல இளம் நடிகர்கள் நடிகர் சங்க தலைவர் திரு. சரத்குமாரிடம் முறையிட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன் நடிகர்கள் நாசர் மற்றும் விஷால் இருவரும் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் மனுவை தனித்தனியாக அளித்துள்ளனர்.
இந்த புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட சரத்குமார் அவர்கள் ராதாரவி மற்றும் காளை ஆகியோருக்கு, அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மச்சானுக்கு மாமன் அனுப்பிய நோடீசுக்கு என்ன என்ன பதில் வரும் என பொருத்துதான பாப்போம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
