“அப்போ பண்ணினேன்.. இப்போ இல்ல” – சர்ச்சைக்கு பதிலளித்த விஜய்..!

கத்தி படம் நன்றாக ஒடிக்கொண்டிருக்கிற நிலையில் தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் டிவிட்டரில் ஒரு நேர்காணல் போன்று ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார் விஜய். ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை விஜய்யிடம் கேட்க அவரும் சளைக்காமல் பதிலளித்தார்.
அதில் “கத்தி படத்தில் கோலா நிறுவனத்துக்கு எதிராக பேசிய நீங்கள் அதன் விளம்பர தூதராகவும் இருந்தீர்களே.. இது முரணாக இருக்கிறதே?” என்று ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு “ஆமாம்.. அந்த சமயத்தில் கொக்கோகோலா விளம்பரத்தில் நடித்தேன்.. ஆனால் இப்போது நான் அதன் தூதர் இல்லை..” என்று பதில் அளித்திருக்கிறார் விஜய்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதள்ளிப்போகிறது வசந்தபாலன் படம்..!
