Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தள்ளிப்போகிறது வசந்தபாலன் படம்..!

On November 9, 2014
Kaaviya-Thalaivan-4
Share

‘ஜிகர்தண்டா’ மூலம் இந்த வருடம் சித்தார்த்துக்கு உற்சாகமாகவே தொடங்கிவிட்டது. இருந்தாலும் அவர் நீண்ட நாட்களாகவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் வசந்தபாலனின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காவியத்தலைவன்’ படத்தைத்தான்.

சித்தார்த்துடன் பிருத்விராஜ், வேதிகா நடிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது ஹைலைட்டான விஷயம்.. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்தப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில் படத்தை குழந்தைகள் தினமான நவம்பர்-14ஆம் தேதி ரிலீஸ் செய்ய முதலில் முடிவுசெய்திருந்தார்கள்.. இப்போது அதில் ஏற்பட்ட சிக்கலால் தற்போது ரிலீஸ் தேதியை நவம்பர்-28 தேதிக்கு மாற்றி வைத்துவிட்டார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.