சிறப்பாக நடந்தது அட்லீ - ப்ரியா திருமணம்...!

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. மேலும் அவரிடமிருந்து வெளியே வந்து தனியாக படம் இயக்கி வெற்றி பெற்ற உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். கடந்த வருடம் ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா, ஜெய் ஆகியோரை வைத்து ‘அவர் இயக்கிய ‘ராஜாராணி’ படம் இளைஞர்களின் இதயம் கவர்ந்த படமாக மாறியது.
சின்னத்திரையிலும் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் நடித்துவரும் நடிகை பிரியாவை, எட்டு வருடங்களாக காதலித்து வந்தார் அட்லீ இரு வீட்டாரின் சம்மதத்துடன் இன்று காலை நடைபெற்ற திருமண வைபவத்தில் இயக்குனர் ஷங்கர் தாலியை எடுத்துக்கொடுக்க ப்ரியாவின் கழுத்தில் தாலிகட்டினார் அட்லீ.
இந்த திருமண விழாவில் இயக்குனர்கள் ஷங்கர், பாலா, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்னம் உட்பட திரையுலகினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
