Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தூள் கிளப்பி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்!

On August 16, 2017
thoothu
Share
thoothu தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் முதல் குவாலிஃபை போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கில்லிஸ் அணி போட்டியிட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆரம்பம் முதல் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 20 ஓவர் முடிவில் வெறும் 114 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பரான எஸ் கார்த்திக் அதிகபட்சமாக ரன்னாக 33 ரன்களை சேர்த்தார். மேலும் சென்னை அணிக்கு எதிராக 3 ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர். தொடர்ந்து தூத்துக்குடி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் 36 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 73 ரன்களை குவித்திருந்தார். தூத்துக்குடி அணி 12.3 ஓவரில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.