Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி! தொண்டர்கள் குவிகின்றனர்

On August 16, 2017
Karunanidhi
Share
Karunanidhi தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்! திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைப்பாட்டின் காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 7 -ம் தேதி அவர் வீடு திரும்பினார். காவேரி மருத்துவமனை பணியாளர்கள் கருணாநிதியின் வீட்டிலேயே சிகிச்சையை மேற்கொண்டனர். இருந்தபோதும் சளித்தொல்லை காரணமாக டிசம்பர் 15-ம் தேதி கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார். அதை தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கருணாநிதிக்கு காவேரி மருத்துமனை டாக்டர்களால் அவரது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கு தொண்டைப் பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதியின் மகள்கள் செல்வி, கனிமொழி, மகள் மு.க.தமிழரசு ஆகியோர் கருணாநிதியுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்பி விடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.