திலீப் படத்துக்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு..!

ஓணம் பண்டிகை ரிலீஸாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘வில்லாளி வீரன்’ என்ற படம் வெளியானது. சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் திலீப் ஒரு சில காட்சிகளில் புத்தர்போல வேடமிட்டு நடித்திருக்கிறார். (மேலே உள்ள படத்தில் இருப்பது சாட்சாத் நடிகர் திலீப்பே தான்.)
இந்த புத்தர் வேடத்தை காதல் காட்சிகளில் பயன்படுத்தியுள்ளதால் புத்த மதத்தை சேர்ந்த பலர் தங்களது மனம் புண்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காட்சிகளை தடைசெய்யாமல் எப்படி சென்சார் அதிகாரிகள் அனுமதித்தார்கள் என அவர்கள் மீது வழக்கு தொடுக்கவும் போகிறார்களாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
