Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிரடி கிளப்புவாரா ‘பங்ஷன் மன்னன்’ ஜெய் ஆகாஷ்..!

On September 10, 2014
Jai Akash
Share

நடிகர் ஜெய் ஆகாஷை உங்களுக்கு தெரியும் தானே.. என்னது யார் அவர் என்று கேட்கிறீர்களா..? அப்ப நீங்க நியூ ஜெனரேஷன் யூத்னு நினைக்கிறேன்.. என்ன சார் அவர் நடிச்ச ‘கிச்சா வயசு 16’ பார்த்ததில்லையா..? அப்படின்னா ‘அமுதே’..? குருதேவா..? ராமகிருஷ்ணா..? அட இதெல்லாம் பக்திப்படம் இல்லைங்க.. சொன்னா நம்புங்க..

உண்மைதாங்க.. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஃபீல்டில் இருந்தாலும் இன்னும் சொல்லிக்கொள்கிற மாதிரி ஒருபடம் கூட தரவில்லையே என்ற ஏக்கம் நடிகர் ஜெய் ஆகாஷுக்கு நீண்ட நாளாகவே இருக்குது. அதனால் தான்சமீபகாலமாக அவரே இயக்குனராகவும் மாறி சில படங்களையும்
இயக்கினார்.

கடந்த மூணு வருஷத்துல அதிகமான படங்களுக்கு பூஜை போட்டவர், ஆடியோ ரிலீஸ் நடத்தியவர் யாரென்றால், நம் ஜெய் ஆகாஷ் தான் அதில் முதலிடம் பிடிப்பார். ‘வின்’, ‘என் உயிர் என் கையில்’ அப்புறம் தெலுங்கில் இன்னும் சில படங்களில் இவர் நடித்து வருகிறாராம்.

மேலே சொன்ன பங்ஷனெல்லாம் நடந்துச்சுங்க... ஆனா படம் எதுவும் ரிலீசாக காணோமே என்கிறீர்களா..? ஆளே இல்லாத கடையில டீ ஆத்துற அந்த மர்மம் தான் இன்னும் யாருக்கும் புரியலை.. ஆனா ஒரு தடவை இவர் பாப்புலராகிறதுக்கு செம ஐடியா பண்ணுனாரு பாருங்க.. அதுதான் ஹைலைட்..

அதாவது நடிகை சுனைனா இருக்காங்களே.. அவங்க இவர் கூட ஒரு படத்துல நடிச்சாங்க.. கவர்ச்சி கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துச்சு.. காரணம் அப்ப அவங்க அவ்வளவா பிரபலம் ஆகலை. அதுக்கப்புறமா ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ன்னு சில படங்கள் மூலமா பிரபலமானாங்க.

அதைப்பார்த்த நம்ம ஜெய் ஆகாஷ் அவர் கூட சுனைனா நடிச்ச படத்தோட சில கவர்ச்சி ஸ்டில்களை உலாவ விட்டாரு.. அப்ப இவருக்கும் சுனைனாவுக்கும் தகராறு ஏற்பட்டு, கடைசில பஞ்சாயத்து பண்ணித்தான் பைசலாச்சு. அப்ப ஒரு பரபரப்பு உருவாக்கி அப்படியே கொஞ்ச நாள்ல அமுங்கிருச்சு..

இப்ப இவர் நடிக்கிற ‘என் உயிர் என் கையில்’ ப்படத்தை தமிழ், ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் படமாக எடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல.. தெலுங்குல மிஸ்டர் ராஜேஷ்’னு ஒரு படத்துல எழு கேரக்டர்ல நடிக்கிறாராம்..

நல்ல விஷயம் தான்... நடிக்கட்டும்... வெறுமனே நடிச்சுட்டு, வெறும் பூஜை, ஆடியோ ரிலீஸ் மட்டும் நடத்திக்கிட்டே இருந்தா போதுமா..? படத்தை எப்பதான் கொண்டு வருவீங்க பாஸ்..? பத்து வருஷத்துக்கு முன்னாடியே அகில உலக ஜெய் ஆகாஷ் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சவராச்சே நீங்க..? அதுக்காகவாச்சும் வெயிட் பண்றோம் பாஸ்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.