விஜய் படத்தை இயக்குகிறாரா அட்லீ..!

‘ராஜாராணி’ என்ற ஒரே படத்தை இயக்கியதிலேயே மிகப்பெரிய உயரத்திற்கு போய்விட்டார் இயக்குனர் அட்லீ.. சமீபத்தில் தான் காதலித்த பெண்ணுடனேயே திருமண நிச்சயதார்த்தம் ஆன சந்தோஷத்தில் இருக்கும் அட்லீ, அடுத்ததாக இளையதளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய், அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த படம் யாருக்கு என அவர் முடிவு செய்யாத நிலையில்தான், அட்லீ அவரை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். விஜய்க்கு அட்லீ சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் விஜய் நடித்தபோது அந்தப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீக்கும் விஜய்க்கும் நல்ல நட்பு இருந்தது. அதற்கடுத்து ‘ராஜாராணி’ ஹிட் கொடுத்ததின் மூலம் அட்லீயின் மேல் விஜய்க்கு நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டதால் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் அவருக்கு தருவார் என அட்லீயின் நெருங்கிய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
