திருப்பதியில் பட்டாசு குடோனில் ஏற்ப்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலி !

ஆந்திர மாநிலம் திருப்பதி ஆட்டோநகர் பகுதியில் பட்டாசுகளை பாதுகாத்து வைப்பதற்கு என்று குடோன் ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு நேற்று மாலை எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சத்தம் 3 கி.மீ தூரம் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியும் நடைபெற்றது. இதில் மணிகண்டா(19), மஞ்சு(13) ஆகியோர் பலியாகினர். விபத்து குறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
