Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குத்துச்சண்டையில் 5 தங்க பதக்கம்! இந்திய வீரர்கள் சாதனை!

On July 31, 2017
arujuna
Share
arujuna செக் நாட்டில் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய வீரரான ஷிவா தாப்பா, ஸ்லொவாக்கியாவின் பிலிப் மெசாரோஸை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான மனோஜ் குமார் செக் நாட்டு வீரரான டேவிட் கோட்டரை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். manoj-kumar 52 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கலும், 56 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் பிதுரியும், 91 கிலோ எடைப்பிரிவில் சதீஷ் குமாரும் தங்கப் பதக்கத்தை வென்றனர். இப்போட்டியில் 52 கிலோ பிரிவில் கவிந்தர் பிஷ்டும், 81 கிலோ பிரிவில் மணிஷ் பன்வாரும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுமித் சங்வான், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹாம்பர்க் நகரில் சில வாரங்களில் நடக்கவுள்ள நிலையில், இப்போட்டியில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.