தனுஷ் படத்துக்கு பாட்டெழுதிய இயக்குனர்

‘மாற்றான்’ படத்தை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் அனேகன். கிட்டத்தட்ட படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெகு விரைவில் வெளியாகவுள்ளது.
படத்திற்கான இசையை பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறும்போது, "இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் கதையின் தன்மையையும் பொறுத்து வெவ்வேறு பரிமாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
"தமிழ்ப்படம்" இயக்கிய C.S.அமுதன் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். சில வருடங்களுக்கு முன், விளம்பரபடங்களில் பணியாற்றிய நேரத்தில் C.S.அமுதனை கே.வி.ஆனந்த் சந்தித்துள்ளார். விளம்பரபடங்களுக்காக அமுதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
C.S.அமுதன் எழுதிய பாடலை பற்றி இயக்குனர் கூறுகையில் "என் படத்தில் மென்பொருள் ஊழியர்கள், வார விடுமுறையை உற்சாகமாக கொண்டாட நினைப்பார்கள். அவர்களின் மனநிலை அறிந்து பாடலை எழுதும் பாடலசிரியர் வேண்டும் என்று நினைத்தேன். அப்போது C.S.அமுதனை நான் தேர்வு செய்தேன், ஏனெனில், அவர் இயற்கையாகவே மிகவும் தளர்வான நபர்" என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமீண்டும் மிரட்ட வரும் ‘ஜித்தன்’
