நஸ்ரியா நிகாஹ்-விற்கு முன் ‘திருமணம் எனும் நிகாஹ்’

நடிகை நஸ்ரியா தமிழில் ஒப்பந்தமான முதல் படம் ‘திருமணம் எனும் நிகாஹ்’. அவரை தமிழுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியது ஆஸ்கர் பிலிம்ஸ் தான். அந்த படத்தில் நடித்து வரும்போதே, நேரம், ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் கமிட்டாகி விட்டார் நடித்து முடித்து அந்த படங்களும் வெளியாகி விட்டன. ஆனால் நஸ்ரியா நடித்த முதல் படம் வெளிவருவதற்குள் அவருக்கு நிகாஹ் செய்ய நிச்சயைக்கப்பட்டும் விட்டது.
வரும் ஆகஸ்டில் நஸ்ரியாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அவரது நிகாஹ்-விற்கு முன்பாகவாவது இந்த ‘நிகாஹ்’ படம் வெளிவராதா? என ரசிகர் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படம் ரிலீஸ் குறித்து சில செய்திகளை வெளியிட்டுள்ளார்.
அதாவது, “ரம்ஜான் தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம். ரம்ஜானுக்கு முன்பாகவோ அல்லது ரம்ஜான் முடிந்தோ நிச்சயம் இந்த படத்தை வெளியிடுவோம்” என்று உறுதியாக குறிப்பிட்டுள்ளார். ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என தெரிகிறது.
ஆக, கையெழுத்திட்ட முதல் படமே கடைசி படமாகவும் மாறியது நஸ்ரியா விஷயத்தில் தான்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதனுஷ் படத்துக்கு பாட்டெழுதிய இயக்குனர்
