Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் மிரட்ட வரும் ‘ஜித்தன்’

On June 28, 2014
jithan 2
Share
jithan 2 வெற்றி பெற்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தயாராவதும் வெளியாவதும் சமீபத்திய தமிழ் சினிமாவின் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் 2௦௦5-ல் வெளியான ஜித்தன் படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது. ராகுல் பரமஹம்சா என்ற புதிய இயக்குனர் இயக்குகிறார். முந்தைய படத்தில் நாயகனாக நடித்த ரமேஷ், 'ஜித்தன்' என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படுவதே அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே எந்த அளவுக்கு பதிவானது என்பதற்கு சான்று. அவரே இந்த படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே 'ஜித்தன்2'. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தயாராகும் 'ஜித்தன் 2' படத்தில் நாயகன் ரமேஷ்க்கு இரண்டு நாயகிகள். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்கு தமிழில் இது முதல் படமாகும். மேலாண்மை கல்வியில் தங்கபதக்கம் வென்ற இயக்குனர் ராகுல் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், சரியான முறையில் விளம்பரம் செய்து வெளியிடுவதுதான் இன்றைய காலகட்டத்தில் சவாலான சூழ்நிலை என்ற பட்சத்தில் தன்னுடைய கல்வி அறிவும், தன்னுடைய அனுபவமும் அதை திறம்பட செய்ய உதவும் என நம்புகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.