Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: உறுதி செய்து திர்பளித்தது உயர்நீதிமன்றம்

On January 6, 2017
30-1483075550-27-1453889263-27-dinakaran53-600
Share
30-1483075550-27-1453889263-27-dinakaran53-600அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் வங்கிக் கணக்கில் கடந்த 1991-1995 ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்மீது அன்னியசெலாவணி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் டி.டி.வி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டது. மேலும், டி.டி.வி.தினகரனை திவாலானவராக அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.