Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'வீரையன்' படத்தின் கதையை என்னிடம் முன்பே சொல்லி இருந்தார்: இயக்குனர் சற்குணம்

On January 6, 2017
veeraiyan-movie
Share
veeraiyan-movieஇனிகோ பிரபாகரன், ஷைனி நடித்திருக்கும் படம் 'வீரையன்'. இப்படத்தை பரீத் தயாரித்து இயக்குகிறார். எஸ்.என்.அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன் வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சற்குணம், "திறமை இருந்தாலும் தன்னடக்கத்துடன் பேசிய இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரிக்கு வாழ்த்துக்கள். இப்படத்தின் இயக்குனர் பரீத் எனது முதல் படமான 'களவாணி' படத்தின் தயாரிப்பாளர் நசீரின் மைத்துனாக எனக்கு அறிமுகமானார். படம் முழுக்க என்னுடன் பணியாற்றினார். வீரையன் படத்தின் கதையை முன்பே என்னிடம் சொல்லி இருக்கிறார். மிகுந்த ரசனைக்காரர். சொந்த காசில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் தான் பாராட்டப்பட வேண்டிய மிகப்பெரிய கலைஞர்கள்" என்று கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.