Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 93-லட்சம் லாரிகள் ஸ்டிரைக்

On October 9, 2017
news-36-lorry-strike
Share
ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால், நாடுமுழுவதும் 93 லட்சம் லாரிகள் ஒடவில்லை. காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகள் தேங்கும் அபாயம் உருவாகியுள்ளது. லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். ஆனால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இரு தினங்களுக்கு நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்தது. news-36-lorry-strike  , இதன் காரணமாக, நாடு முழுவதும் இன்றும், நாளையும் 93 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழகத்தை பொறுத்தவரை 4.5 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக 75 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்களும் பங்கேற்கின்றனர். லாரி வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளி, பருப்பு உள்ளிட்ட சரக்குகள் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சிவகாசி பகுதியில் இருந்து லாரிகளில் பட்டாசு கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல்லில் 50 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.