சுவாரஸ்யங்கள் அடங்கிய ‘வெண்நிலா வீடு’..!

விளம்பர யுக்தி மூலம் பல வெற்றிப்படங்களுக்கு துணை நின்ற நிறுவனம் தற்போது தி வைப்ரண்ட்மூவீஸ் என்கிற நிறுவனத்தை உருவாக்கி, வெளியிடும் முதல் படம் தான் ‘வெண்நிலா வீடு’. வெற்றி மகாலிங்கம் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
உழைப்பில் தன்னை கரைத்துக்கொண்டு குடும்ப பொருளாதாரத்தையும் உயர்த்தும் இன்றைய நடுத்தர குடும்பங்களின் வாழ்வுதான் இந்தப்படத்தின் கதை. மிர்ச்சி செந்தில், ‘அஞ்சாதே’ விஜயலட்சுமி, மலையாள சினிமாவில் பிரபல நாயகியான ஸ்ரீந்தா ஆசாப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வெண்நிலா வீடு படம் ரீலிஸாவதற்கு முன்பே அந்தப் படத்தின் “ஜானி ஜானி வா மாமா” என்ற பாடல் யூ டியூப்பில் பத்து லட்சம் ரசிகர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தப் பாடல் விநயோகஸ்தர்களின் வேண்டுகோளின்படி படத்திலும் இணைக்கபபட்டுள்ளது. இப்பாடலில் முன்னணி நடச்த்திரங்களான சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணா, பிரேம்ஜி, வெங்கட்பிரபு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை யாரும் கவனம் செலுத்தாத சமூகப்பிரச்சனையை இந்தப் படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக படம்பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி “யு” சர்டிபிகேட் வழங்கியுள்ளனர்..
சமீபத்தில் திருமணமான இந்தப்படத்தின் நாயகன் மிர்ச்சி செந்தில் தன் மனைவி மீனாட்சியுடன் படம் பார்த்தார் படத்தின் இறுதிகாட்சியில் தன் கணவனின் நடிப்பினை பார்த்து கண்ணீர் விட்டு அவரது தோளில் சாய்ந்தாராம் மீனாட்சி.
இந்தப்படத்தின் மூலம் மிர்sச்சி செந்தில் என்ற பெயரை செந்தில்குமார் என்று டைட்டிலில் மாற்றியுள்ளார். வல்லினம் படத்தின் மூலம் தேசிய விருது வாங்கிய எடிட்டர் சாபு ஜோசப் தான் இந்தப்படத்தின் படத்தொகுப்பாளர். ஆகஸ்ட் மாதம் இந்தப்படம் திரைக்கு வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
