ட்ரைவர், கண்டக்டராக பட்டைய கிளப்பும் விதார்த் - சூரி..!

பொன்மனம், என் உயிர்நீதானே, என் புருஷன் குழந்தை மாதிரி விஜய் நடித்த சுறா ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் தற்போது ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். விதார்த், சூரி இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக மனிஷா யாதவ், கோவை சரளா, இளவரசு,இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்க முருகராஜ் என்பவர் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.
பழனி-பாப்பம்பட்டி ரூட்டில் ஓடும் மினிபஸ். அதன் ட்ரைவர் விதார்த்.. கண்டக்டர் சூரி.. பஸ் ஓனராக இமான் அண்ணாச்சி.. இந்த காம்பினேஷனுடன் இந்த மினி பஸ்ஸை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கலந்து காதல் கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
