Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சர்வதேச தரத்தில் உருவாகி வரும் ‘ராஜமௌலி’யின் ‘பஹுபாலி’

On June 26, 2014
bahubali
Share
bahubali தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘நான் ஈ’ படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு அவர் இயக்கி வரும் படம் ‘பஹுபாலி’. தமிழிலும் மகாபலி என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதுநாள் வரை தமன்னா தவிர மற்றவர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கபட்டு வந்தன. தற்போது தமன்னா பஹுபாலி குழுவுடன் இணைந்துள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மற்றும் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் ஆகிய இடங்களில் இப்படத்திற்கென சிறப்பாக பிரம்மாண்ட செட்களை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபுசிரில் அமைத்துள்ளார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை, சிறிது இடைவேளைக்கு பிறகு தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு இவ்வருடம் இறுதி வரை படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. 2015 ஆம் வருடம் கோடைக்காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். படத்தில் வரும் போர் காட்சிகள் சர்வதேச தரத்தில் உருவாகும் படங்களுக்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையை M.M.கீரவாணியும், ஒளிப்பதிவை செந்திலும் மேற்கொள்கின்றனர்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.