Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் இணையும் ‘என்னமோ நடக்குது’ டீம்

On June 26, 2014
Ennamo-Nadakkudhu-Movie-Sills-14
Share
Ennamo-Nadakkudhu-Movie-Sills-14 சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற “என்னமோ நடக்குது” படத்தை தொடர்ந்து, அதே டீம் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறது. அப்படத்திற்கு “சிகண்டி” என வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்கள். “என்னமோ நடக்குது” படத்தை தயாரித்த டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தில் இரண்டு நாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள். விஜய் வசந்த், முன்னணி நாயகர் ஒருவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர் – நடிகைகள் பலரும் நடிக்க எழுதி இயக்குகிறார்  பி.ராஜபாண்டி. படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, ““என்னமோ நடக்குது” படத்தை போலவே இதுவும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஆக்ஷன் படம். நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள்  பங்கேற்க “சிகண்டி” தயாராகிறது. சமூக நோக்குடன் அமைக்கப்பட்ட இக்கதையில் இன்றைய காலகட்டத்தில் தெரிந்தே நான் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக குற்றத்தை தோலுரித்துக் காட்டும் படமே “சிகண்டி” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.