Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்னது!! ‘நயன்தாரா’ ஆடியோ ரிலீஸ்க்கு வர்றாங்களா?

On June 26, 2014
Nayanthara_latest_photos_at_Nandi_awards_2013_004
Share
Nayanthara_latest_photos_at_Nandi_awards_2013_004 தங்கள் படங்களை விளம்பரப்படுத்தக்கூட இசை வெளியீடு, பிரஸ்மீட் என எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார்கள் சில ‘மோஸ்ட் வாண்டட்’ டாப் நடிகைகள். அந்த வகையில் திரிஷா, நயன்தாரா ஆகியோர் முக்கியமானவர்கள். இதில் நயன்தாரா இருக்கிறாரே? எந்த விழாவுக்கும் நான் வரமாட்டேன் என்றால் படத்தில் நடிக்க கைஎழுதிடுகிறேன் என்று கறாராக சொல்கிறவர். ஆனால் தற்போது ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு முதல் ஆளாக வந்திறங்கப் போகிறார். அதுமட்டுமல்ல, இசையை வெளியிடும் அந்த ‘பொன்னான கரங்களே’ நயன்தாராவின் கரங்கள் தான். அதை பெற்றுக்கொள்ளும் கரங்கள் நயன்தாராவின் நெருங்கிய தோழி த்ரிஷாவின் கரங்கள். இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் அந்த விழா ஆர்யாவின் குடும்ப விழா. ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துள்ள ‘அமரகாவியம்’ என்ற காதல் காவியத்தை வெளியிடத்தான் இருவரும் ஆர்யாவின் அழைப்பை ஏற்று வருகிறார்கள். ரசிகர்கள் தங்கள் தலைவியை காண படை எடுப்பார்கள் என்பது உறுதி. விழாவில் உட்கார சீட்டு கிடைக்குமா??

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.